பிரேமம் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இளைஞர்கள் மத்தியில் அவர் அதிகம் பிரபலம் ஆனதால் அவருக்கு மற்ற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்தது.
தனுஷின் கொடி படத்தில் நடித்தார் அவர். அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது நடிகர் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் அனுபமா.
அதர்வாவின் பூமராங் படத்தினை இயக்கிய கண்ணன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். அந்த படம் தோல்வி அடைந்தாலும் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.