பேஷன் என்றாலே அது பெண்களுக்கு மட்டும்தானோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் பெண்களைக் குறித்தே பல விளம்பரங்களும் வீடியோக்களும் வெளியாகி வரும் நிலையில், ஆண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ‘மோட் கிளாம்’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள், கடந்த 100 வருடத்தில் ஆண்களின் நீச்சல் உடையில் நடந்த மாற்றங்களை 3 நிமிடத்தில் அழகான ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர்.