பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சோகமான நேரம். காரணம் நிகழ்ச்சி இன்னும் கொஞ்ச நாளில் முடிவுக்கு வர இருக்கிறது.
போட்டியாளர்களுக்கு போட்டிகளும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. பைனலுக்கு போட்டிகள் மூலம் முதல் இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு தேர்வாகியுள்ளார் முகென்.
இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் தர்ஷனிடம் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என பிக்பாஸ் கேட்க, அதற்கு அவர் ஷெரின் என கூறுகிறார்.
ஷெரினை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என பிக்பாஸ் கூற அதையும் செய்கிறார். பின் சாண்டி அவர்களையும் காப்பாற்ற விரும்புகிறேன் என அவருக்காகவும் பச்சை மிளகாய் சாப்பிடுகிறார். கவின், லாஸ்லியாவிற்காக இப்படி செய்கிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.