தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் எப்போதோ முடிந்துவிட்டது. இன்று 103ம் நாள், வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இறுதி நாள்.
அன்று யார் பிக்பாஸ் 3வது சீசனில் டைட்டிலை வெல்லப்போகிறார் என்று தெரியவரும். பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்க பழைய போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் என வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலை வந்துள்ள புதிய புரொமோவில் கவின் மற்றும் தர்ஷன் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.