பிகில் படத்தின் ரிலீஸ் திகதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல அக்டோபர் 25ம் திகதி வெள்ளிக்கிழமை தான் படம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
முன்பதிவில் அதிகம் ஈட்டிய இந்திய படம் என்ற சாதனையை பிகில் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.