நடிகர் சூர்யாவின் படங்கள் ஒரு தனியாக ஈர்ப்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரின் படங்களுக்கும் குடும்பத்துடன் ரசிகர்கள் வருவதுண்டு.
கடந்து முறை வந்த காப்பான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விவசாயிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டினர்.
சூர்யா பல ஹிட் படங்களை கொடுத்தவர். அண்மையில் சினிமா தியேட்டர் முதலாளிகளை கொண்டு நேர்காணலை வலைதளம் ஒன்று நடத்தியது.
அப்போது பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த விவரங்கள் பேசப்பட்டது. இதில் சென்னை வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதம் பேசினார்.
அவர் 2010 ல் 7 ம் அறிவு படம் வந்த போது ஏற்கனவே வழக்கம் போல முன்பதிவுகள் நடைபெற்றது.
ஒரு நாள் முன்பு திடீரென அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு, பின் முதல் நாள் முன்பு இரவு காட்சிக்கு ஏற்பாடு என அழுத்தம் தரப்பட்டது. இருந்த போதிலும் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ். இப்படியான ஒன்று மீண்டும் எப்போது வரும் என தெரியவில்லை என்று கூறினார்.