ஹரி இயக்கத்தில் உருவான ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு வந்தவர் பானு (முக்தா).
தொடக்கத்தில் பெரிய அளவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்கவில்லையென்றாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
அவருக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. மலையாள சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக விளங்கும் ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை மணக்கவிருக்கிறார். இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் திகதி கேரளா, கொச்சியில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இம்மாதம் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கும் ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் பானு நடித்துள்ளார். இவைதவிர சகுந்தலாவின் காதலன் என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். நிறைய கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என் நடிப்பு தொடரும் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார். வாழ்த்துகள் பானு.