‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ ஆகிய படங்களில் நடித்த தன்ஷிகா, தற்போது ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு மகளாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த படத்தில் தன்ஷிகா போதை மருந்துக்கு அடிமையானவராக நடிக்க இருக்கிறாராம். இந்த வேடத்திற்காக பல நடிகைகளை தேர்வு செய்திருக்கிறார்கள். கடைசியாக அந்த கதாபாத்திரத்திற்கு தன்ஷிகாதான் பொருத்தமாக இருந்தார் என்று தேர்வு செய்திருக்கிறார்களாம்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படத்திற்கான தலைப்புகள் ‘காளி’, ‘கண்ணபிரான்’ என்று வைக்க இருப்பதாக வதந்திகளும் பரவி வருகின்றன.