பிரபல இயக்குனர் அட்லீ விநியோகிக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடமொன்றில் வளர்ந்து வரும் இளம் கலைஞரான விஜிதன் நடித்துள்ளார். மேலும் துணை இயக்குனராகவும் விஜிதன் பணியாற்றியுள்ளார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், ஓ2 மற்றும் பெஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்தை இயக்குனர் அட்லீ விநியோகம் செய்யவுள்ளார்.
இந்த படத்திற்கு அந்தகாரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டரை அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த வளர்ந்து வருபவரான முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன். மேலும், படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
விஜிதன் ஏற்கனவே சரபம் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், இதே இயக்குனரின் அடுத்த படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.
இது தவிர ஏற்கனவே பல முக்கிய குறும்படங்களில் விஜிதன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.