தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக தனது ரசிகர்களின் பேர் ஆதரவினால் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.
இவர் தனது பல படங்களில் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நடித்துள்ளார். ஏன் தங்கை செண்டிமெண்ட் உள்ள திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற படங்களை கூட திரையுலகிற்கு தந்துள்ளார்.
விஜய்க்கு, உடன்பிறந்த வித்யா என சகோதரி ஒருவர் உள்ளார். ஆனால் இவர் உடல்நல குறைவால் 2 வயதிலேயே இறந்துவிட்டார்.
இந்நிலையில் இவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்கள் பகிரும் அரிய புகைப்படங்கள் சிலர் பார்த்திருக்க கூடும்.
ஆனால் தற்போது இவரின் மரணத்திற்கு முன்பு குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.