சினிமா, சீரியல் பிரபலங்கள் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் அது பலரின் கவனத்தை பெறும். அதே வேளையில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்ச்சி என்றால் அது ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம் தான்.
அந்த வகையில் தற்போது ஹிந்தி சீரியலை சேர்ந்த பிரபல நடிகை ஷிகா சிங் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார்.
kumkum bhagya என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் கரண் ஷா என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் கூறியுள்ளார்.
தாய்மையடைந்த அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.