பிரபல மலையாள நடிகை பானு. 2005–ம் ஆண்டு ‘அச்சன் உறங்காத வீடு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான படங்களில் நடித்தார்.
மேலும் தமிழில் நடிகர் விஷால் ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார். தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்த பானு அதன்பிறகு மீண்டும் மலையாள பட உலகிற்கு சென்று பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மலையாள பின்னணி பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு–ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் பங்கேற்றனர்.
நடிகை பானு – ரிங்கு டோமிக் திருமணம் வருகிற 30–ந் திகதி எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறுகிறது. இதில் மலையாள பட உலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.