லைட்டா ஒரு திமிங்கலம் கடலுக்கு மேலே துள்ளி குதிக்கறத பாத்தாலே, அதைப் பார்த்த சுற்றுலாப்பயணிகளுக்கு அன்னைக்கு நைட் தூக்கமே வராது. அப்படி இருக்கும் போது, தலைகீழா ஒரு திமிங்கலம் டைவ் அடிக்கறத நேர்ல பாத்த சுற்றுலாப் பயணிகள் எவ்ளோ அதிர்ஷ்டசாலிகளா இருந்துருக்கணும்.
கனடாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள பண்டி விரிகுடாவில் திமிங்கலத்தைப் பார்வையிடும் பயணத்திற்காகச் சென்ற குடும்பத்தினர்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். ‘தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று அதை வீடியோவாகவும் எடுத்து யூ-டியூபிலும் வெளியிட்டுள்ள அவர்களின் நல்ல உள்ளத்தை என்ன சொல்லிப் பாராட்டுவது?
இதோ அந்த வீடியோ: