தைவான் தலைநகர் தைபேயில் ‘Face of Leonardo: Images of a Genius’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பல மேதைகளின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் 350 ஆண்டு பழமையான Paolo Porpora-வின் ஓவியமும் ஒன்று.
இந்த ஓவியங்களைக் கண்டுகளிக்க வந்த 12 வயது தைவான் சிறுவன் தெரியாமல் செய்த ஏடாகூடமான காரியத்தால், இப்போது ஓவியத்தில் ஒரு பெரிய ஓட்டை ஒன்று தெரிகிறது. அந்த ஓவியத்தின் விலை 1.5 மில்லியன் டாலர் (சுமார் 10 கோடி ரூபாய்). இவ்வளவு பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு அந்த சிறுவனின் குடும்பம் வசதியானது இல்லை. அவர்கள் கொடுக்கத் தேவையும் இல்லை. காரணம் ஓவியம் இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ: