தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் படங்களுக்கு மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு நடிகரின் படம் என்றால் சூர்யாவின் சூரரைப் போற்று இப்போது அதிக எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
கொரோனாவால் படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லாமல் அக்டோபர் 30ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இப்படம் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தை அப்படியே ரூ. 60 கோடியே கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.
அதுமட்டுமில்லாமல் சாட்டிலைட் வியாபாரம் ரூ. 40 கோடிக்கு நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மொத்தமாக இப்போதே சூர்யாவின் சூரரைப் போற்று படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.