பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இன்று அவர்கள் மக்களுக்கு ஒரு சவால் விட்டுள்ளனர். அதாவது இந்த 4வது சீசனில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று நீங்கள் கூறுங்கள், ஒன்றாக இருக்கிறதா பார்ப்போம் என்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்கள் இப்போதே சில பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர். தற்போது தொகுப்பாளர் ரக்ஷன் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர் நீங்கள் ஏன் தொலைக்காட்சியில் வருவதில்லை என கேட்க அதற்கு அவர் விரைவில் ஆனால் கொஞ்சம் ஸ்பெஷலாக என பதிவு செய்துள்ளார்.
எனவே அவர் ஸ்பெஷல் என கூறுவது பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியாக இருக்குமோ என்பது ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது.