பிரபல டைம் இதழின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1927 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் சிறந்த நபர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்களப்பணியாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி டைம் இதழின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர்களின் பட்டியலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் கதையை மாறுகிறது எனக் குறிப்பிடப்பட்டு இருவரும் டைம் இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.