உலகளவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 71,536,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1,603,503 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 4.97 கோடி பேர் குணமடைந்துள்ளனர். சுமாா் 20,195,345 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 106,606 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கொரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 16,295,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 302,762 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 9,507,476 பேர் குணமடைந்துள்ளனர், 6,485,476 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27,324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில்இதுவரை 9,827,026 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 142,662 ஆக உள்ளது. இதுவரை 9,324,328 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.