உலகளவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 7.2 கோடி போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 72,654,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1,619,028 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 5.08 கோடி பேர் குணமடைந்துள்ளனர். சுமாா் 20,164,117 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 106,182 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கொரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 16,737,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 306,459 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 9,724,439 பேர் குணமடைந்துள்ளனர், 6,706,369 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27,611 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 9,884,716 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 143,393 ஆக உள்ளது. இதுவரை 9,388,159 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு – பாதிக்கப்பட்டோர் – மரணம்
உலகில் – 72,654,602 – 1,619,028
USA – 16,737,267 – 306,459
India – 9,884,716 – 143,393
Brazil – 6,901,990 – 181,419
Russia – 2,653,928 – 46,941
France – 2,376,852 – 57,911
UK – 1,849,403 – 64,170
Italy – 1,843,712 – 64,520
Turkey – 1,836,728 – 16,417
Spain – 1,741,439 – 47,624
Argentina – 1,498,160 – 40,766