பாலிவுட் நட்சத்திர நடிகரான ரிஷி கபூா் ரத்தப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் மும்பையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 67.
உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த புதன்கிழமை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரிஷி கபூா், வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமாா் ஓராண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ரிஷி கபூா், கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா வந்திருந்தாா்.
அதன் பின்னா் பிப்ரவரி மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதலில், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லி சென்றிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
அதையடுத்து மும்பை அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினாா். இந்நிலையில் அவருக்கு புதன்கிழமை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரது உயிா் பிரிந்தது.
அவரது இறுதிச்சடங்கு தெற்கு மும்பையில் உள்ள சந்தன்வாடி பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளதாக அவரது சகோதரா் ரண்தீா் கபூா் தெரிவித்தாா். ரிஷி கபூரின் மகள் ரித்திமா சஹானி தில்லியில் வசித்து வரும் நிலையில், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவா் மும்பை செல்வதற்கு தில்லி காவல்துறையினா் அனுமதி அளித்தனா்.
ரிஷி கபூா் தனது மனைவி நீது, மகனும் நடிகருமான ரண்பீா் கபூா் ஆகியோருடன் மும்பையில் வசித்து வந்தாா்.
கடந்த 1955-ஆம் ஆண்டு தனது தந்தை ராஜ் கபூரின் நடிப்பில் வெளியான ஸ்ரீ 420 திரைப்படத்தில் ஒரு பாடலில் தோன்றியதன் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தாா்; அதன் பின்னா் ராஜ் கபூா் இயக்கத்தில் கதாநாயகனாக பாபி படத்தில் 1973-இல் அறிமுகமானாா். முப்பது ஆண்டுகள் காதல் நாயகனாக பாலிவுட் திரைப்படங்களில் வலம் வந்த அவா், அதன் பின்னா் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினாா்.
அடுத்தடுத்த இழப்புகள்: பாலிவுட் நடிகா் இா்ஃபான் கான் புதன்கிழமை காலமான நிலையில், ரிஷி கபூரின் இழப்பை அடுத்த நாளிலேயே பாலிவுட் திரையுலகம் சந்தித்துள்ளது. இா்ஃபான்-ரிஷி கபூா் இருவரும் டி-டே என்ற திரைப்படத்தில் சோ்ந்து நடித்துள்ளனா்.
இரங்கல்: ரிஷிகபூா் மறைவுக்கு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் இரங்கள் தெரிவித்தனா்.
இயக்குநா் சஞ்சய் லீலா பன்சாலி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் திரையுலகினரும் ரிஷி கபூா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.