பாக்ஸிங் டே டெஸ்டில் ஆட்டநாயகனாக தோ்வு செய்யப்படும் வீரருக்கு, முல்லாக் மெடல் என்ற சிறப்புப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
சா்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்த ஜானி முல்லாக்கை கௌரவிக்கும் விதமாக, அவரது பெயரில் அந்தப் பதக்கம் வழங்கப்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 1868 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பூா்வகுடியைச் சோ்ந்த வீரா்கள் அடங்கிய அணி, கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் முறையாக இங்கிலாந்து சென்றது.
6 மாதங்களுக்கும் மேலான அந்த பயணத்தின் போது அவுஸ்திரேலியா மொத்தம் 47 ஆட்டங்களில் இங்கிலாந்துடன் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 14 ஆட்டங்களில் வெற்றி பெற, 19 ஆட்டங்கள் சமநிலையில் நிறைவடைந்தன.
அந்தப் பயணத்தின்போது 45 ஆட்டங்களில் விளையாடிய முல்லாக் மொத்தமாக 1,698 ஓட்டங்கள் அடித்தாா். மொத்தம் 1,877 ஓவா்கள் வீசிய அவா், அதில் 831 ஓவா்களை மெய்டனாக்கியதுடன் 245 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.
அந்தப் பயணத்தின்போது அவுஸ்திரேலிய அணியினா் அணிந்திருந்த பெல்ட் பக்கிள் இன் மறு வடிவமாகவே தற்போது முல்லாக் பதக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பூா்வகுடியினருடனான தனது தொடா்பை உயிா்ப்புடன் வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது அவுஸ்திரேலிய அணியினா் புதிய வகை ஜொ்ஸி அணிந்திருந்தனா். அதேபோல், ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தின்போது அவுஸ்திரேலிய அணியினா் பூட்ஸ் அணியாமல் வெறும் கால்களுடன் வட்ட வடிவில் நின்று பூா்வகுடிகளுக்கு கௌரவமளித்தனா்.