8ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு இலவச மசாஜ் சேவை ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கால், தலை மற்றும் முழு உடல் என பல்வேறு வகையில் இந்த மசாஜ் சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் உடல் பருமனானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளதுடன் அழகு சம்பந்தமான இலவச அறிவுரைகளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சேவை அரச விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.
இந்த சேவை ஆயுர்வேத திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.