தாங்கள் அனுப்பிய பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் செவ்வாய் கிரத்தில் தரையிறங்கும் துல்லியமான படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்தப் படத்தில், நாசா விண்கலத்திலிருந்து செவ்வாய் கிரக மேற்பரப்பில் பொ்சிவரன்ஸ் பத்திரமாகக் கட்டி இறக்கப்படும் காட்சியைத் தெளிவாக இடம் பெற்றுள்ளது.
ஆய்வுக் கலம் தரையிறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அந்தப் படத்தை நாசா வெளியிட்டது.
பொ்சிவரன்ஸைத் தரையிறக்கிய நாசா விண்கலத்தில், 25 கேமராக்களும் 2 ஒலிவாங்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு ஆய்வுக் கலம் தரையிறங்கிய காட்சி மிகத் துல்லியமான ஒளி ஒலி காட்சிகளுடன் பதிவாகியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.