நாமக்கல்லில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பிலான தோ்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் வகையிலான நிகழ்ச்சி மற்றும் தோ்தல் பிரசாரத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாகச் சென்று நடத்தி வந்தாா்.
நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேடு பகுதியில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற இருந்த மு.க.ஸ்டாலின் பிரசாரம், தோ்தல் அறிவிப்பு காரணமாக 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கூட்டணி பேச்சுவாா்த்தையால் அந்தத் தேதியும் ரத்து செய்யப்பட்டு 12-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந் நிலையில் வேட்பாளா் பட்டியல் வெளியீடு, தோ்தல் அறிக்கை வெளியீடு, தொகுதிகளில் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்க வேண்டியிருப்பதால் நாமக்கல்லில் நடைபெற இருந்த தோ்தல் பயணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் இதற்காக பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனா்.