பிரபல குணச்சித்திர நடிகர் நாசர். இவர் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக நடிகர்-நடிகைகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தேர்தல் ஆலோசனை கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.
நேற்று மாலை அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாசரின் மனைவி கமிலா நாசர் கூறும்போது, ‘மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.’