பேய் படங்களைப் போல பேய் சீரியல்களும் இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் நெடுந்தொடர் ” 7ஆம் உயிர் ” 50 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது.
வெள்ளை வெளேர் என்ற நைட்டி போட்டுக்கொண்டு தலைவிரி கோலமாய் ஆட்களை போட்டும் தள்ளும் தீய சக்தியாக டெரர் காட்டியுள்ளார் நடிகை சூசன்.
7 இளம் பெண்கள்
வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம்பெண்களை கொள்வதற்கு தேடி அலையும் ஒரு தீய சக்தியின் சாகசங்கள் நிறைந்த 7ம் உயிர் தொடர் மர்மமும், பரபரப்பும் நிறைந்த ஒரு அமானுஷ்ய கதை.
3வது உயிர்
இந்த தொடரில் இரண்டு பெண்களை ஏற்கெனவே பலிவாங்கிய தீய சக்தி, மூன்றாவதாக மலைப்பகுதியில் வாழும் பெண்ணான பொன்னியை பழிவாங்க நெருங்குகிறது. அந்த பெண்ணை மனதார நேசிக்கும் ரேஞ்சரின் கதி என்னாகும்?
பொன்னி தப்புவாளா?
பொன்னியின் சாவை தடுக்கப் போராடும் ப்ரியாவின் முயற்சிகள் வெற்றி பெறுமா? இந்த மூன்றாவது உயிராவது தீய சக்தியின் பலியிலிருந்து தப்புமா?என்ற கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தொடர் சென்று கொண்டிருக்கிறது.
காடுகளில் உலாவரும் பேய்
அக்ரஹாரம் ,கடலோரம் என பயணப்பட்ட கதைக்களம் தற்போது மலை, காடு என மூன்றாம் பகுதியாக பயணப்படுகிறது. நாயகனாக வெற்றிச்செல்வன் மற்றும் தீய சக்தியாக சூசனும் ,பொன்னியாக ஏகவள்ளியும்,பிரியாவாக லக்ஷ்மி விஸ்வநாத்தும் நடிக்கும் இந்த திகில் தொடர் 50 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. 7ம் உயிர் தொடர் நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.