பிக் பாஸ் புகழ் முகென் ராவ், வேலன் என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கவின் மூர்த்தி இயக்கும் இப்படத்தில் மீனாக்ஷி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, பிரபு, தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள்.
ஆஹா கல்யாணம் என்கிற இணையத் தொடரில் பவி டீச்சராக நடித்து கவனம் பெற்ற பிரிகிடா, வேலன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திலும் பவித்ரா என்கிற பெயரைக் கொண்ட வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு அயோக்யா, மாஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார்.