இயக்குநர் பாரதிராஜா, கொரோனா தடுப்பூசியை தேனியில் செலுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 1 இலட்சத்து 96 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரை இந்தியாவில் 19 கோடியே 85 இலட்சத்துத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, தேனியில் உள்ள தனது இல்லத்தில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.