சமையல் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் மனதை கவர்ந்தவர் அஷ்வின்.
நாம் தினமும் சாம்பார், காரை குழம்பு என சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க இவர் வித்தியாச வித்தியாசமாக சமைத்து எல்லோரையும் அசத்தினார்.
ஏன் பலவித சாப்பாட்டை சாப்பிட்டிருக்கும் நடுவர்களையே சில வித்தியாசம் சமையல் செய்து அசத்தியிருக்கிறார்.
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடித்ததில் இருந்து அஷ்வின் நிறைய படங்கள் கமிட்டாகி வந்தார், அந்த அறிவிப்புகளும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் அஷ்வினின் முதல் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறதாம், அதனை மாலை 7 மணியளவில் நடிகர் ஆர்யா சமூக வலைளதளங்களில் ஷேர் செய்ய உள்ளாராம்.