மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளது.
கிராஸ் ஐலெட்டில் நடைபெற்ற 3 வது டி20 ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. ஹென்ரிகஸ் 33 ஓட்டங்கள் எடுத்தார். ஹேடன் வால்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதை அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் அணி, கிறிஸ் கெயிலின் அதிரடியால் இலக்கைச் சுலபமாக அடைந்தது. 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்து 3 வது டி20 ஆட்டத்தையும் டி20 தொடரையும் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
5 ஆட்டங்கள் டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 – 0 என முன்னிலை வகிக்கிறது. 1995 மார்ச் மாதத்துக்குப் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது.