நடிகா் சூரியின் இல்ல திருமண விழாவில் 10 பவுன் நகைகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திரைப்பட நகைச்சுவை நடிகா் சூரியின் சகோதரா் மகளின் திருமணம், விரகனூா் சுற்றுச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருமண விழாவில் நடிகா், நடிகையா் பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து உறவினா்கள், ரசிகா்கள் ஏராளமானோா் திருமண விழாவில் பங்கேற்றனா்.
இந்நிலையில், அரங்கில் மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் மாயமானது.
இதனால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மண்டப மேலாளா் சூா்யபிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.