மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதே போல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியும், விக்ரம் திரைப்படம் வருகிற மார்ச் 31 ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதியும், வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதியும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.