‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க தேவி ஸ்ரீ பிசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமந்தா நடனமாடியுள்ள பாடலின் தெலுங்கு பதிப்பு நேற்று (டிசம்பர் 12) வெளியானது.
தற்போது இந்தப் பாடலின் தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. ஓ சொல்றியா என்று துவங்கும் பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்தப் பாடலை எழுதியுள்ளார். தமிழ் பதிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.