பிக்பாஸ் 5வது சீசன் 50 நாட்களுக்கு பிறகு படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அதிக சண்டைகள், கடுமையான போட்டிகள், போட்டியாளர்களுக்குள் நடக்கும் பெரிய விவாதம் என அனல் பறக்க நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
போட்டியாளர்களை சும்மா இருக்க விடாமல் தொடர்ந்து போட்டிகளாக கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.
இன்று காலை வந்து புரொமோவிலும் புதிய டாஸ்க் எல்லாம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மக்கள் பிக்பாஸ் போட்டியாளர்களில் வருண் வெற்றியாளராக வரலாம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வருணின் தாயார் குறித்து ஒரு செய்தி உலா வருகிறது. அவரது தாயார் ஒரு பியூட்டிஷியனாம். அவர் தொலைக்காட்சிகளில் அழகு குறிப்புகள் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்குபெற்றுள்ளார்.
வருண் அவரது தாயாருடன் எடுத்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அட இவர்தான் அவரது அம்மாவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.