நடிகர் அஜித்தின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த First லுக் முதல் விசில் தீம் வரை அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து அஜித்தின் அணைத்து வெறித்தனமான ரசிகர்களும் காத்துகொண்டு இருப்பது, வலிமையின் டிரைலருக்காக தான். இந்நிலையில் டிரைலர் குறித்து இயக்குனர் வினோத் சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளாராம்.
அவர் கூறியதாவது ´ வலிமை படத்தின் டிரைலர் தான் அடுத்தது வெளியாகும் ´ என்று கூறியுள்ளாராம். அதன்படி, வலிமை படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் டிரைலர் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.