பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 5வது இடத்தை பிடித்த நிரூப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனை தொடர்ந்து ராஜு, பிரியங்கா, அமீர் மற்றும் பாவ்னி இருந்த நால்வரில் ஒருவர் மட்டுமே டைட்டிலை தட்டி செல்லவுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் பிக் பாஸ் பைனல் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக, முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் வரவுள்ளாராம். பிக் பாஸ் பைனல் மேடையிலேயே, கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிடவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website