ஹாலோவின் மாதமான அக்டோபரில், இந்தக் கொண்டாட்டங்களுக்காக தமது வித்தியாசமான உடைகளை மக்கள் தேடித்தேடி தேர்வு செய்துவரும் வேளையில், உடையலங்காரப் போட்டிகளுக்கு முன்னாலேயே வென்றுவிட்டது ஒரு பூனைக்குட்டி.
கடல் கொள்ளையனாக உடையலங்காரம் செய்யப்பட்டுள்ள, இந்த பூனைக்குட்டி புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘பைரேட்ஸ் ஆப் த கரீபியன்’ படத்தின் கேப்டன் ஜேக் ஸ்பேரோவைப் போல சிடு சிடுப்பான முக பாவத்துடன் இருப்பது, எல்லோருக்கும் சிரிப்பு மூட்டுகின்றது.
அமெரிக்க தளங்களில் பட்டையைக் கிளப்பும் இந்த பூனைக்குட்டியின் வீடியோ இணைப்பு உங்கள் பார்வைக்கு..,