தமிழ் சினிமாவில் 80களில் இருந்து படங்கள் நடித்து மக்களின் மனதில் நின்றவர் நடிகை ஊர்வசி. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க வீட்ல விசேஷங்க என்ற படத்தில் ஊர்வசியும் நடிக்கிறார்.
இப்படம் ஹிந்தியில் படு ஹிட்டான Badhai Ho படத்தின் ரீமேக் ஆகும். தற்போது நடிகை ஊர்வசி வீட்டில் நடந்த சோகமான சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
ஊர்வசியின் அண்ணன் கமலுக்கு பிரமிலா என்பவருடன் திருமணம் நடந்தது, ஆனால் ஏதோ பிரச்சனையால் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
விவாகரத்துக்கு பிறகு தற்போது 52 வயதான பிரமிலா தனது அண்ணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
அவரது வீட்டிலும் மிகவும் ஏழ்மை, அவருக்கு நடிகை கல்பனா இருந்தவரை பண உதவிகள் செய்துள்ளார். இப்போது சாப்பிட கூட வழியில்லை எனவே அண்ணன்-தங்கை இருவரும் வீட்டில் வெவ்வேறு அறைகளில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
தங்களது இந்த முடிவுக்கு ஏழ்மையே காரணம் என்றும் கடிதத்தில் பதிவு செய்துள்ளனர்.