அஜித் நடிப்பில் கடந்த 24 ஆம் திகதி பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் நாளிலேயே தமிழகத்தில் சுமார் ரூ. 28 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளது வலிமை. ஆம், மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website