நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவர் உடன் ஸ்ருதி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன. அவர்கள் திருமணம் எப்போது என்று தான் தற்போது நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது..
“இது மகிழ்ச்சியான அறிவிப்பு அல்ல. அவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்தும் நான் கொரோனா பாசிட்டிவ் ஆகி இருக்கிறேன். இதில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். நன்றி, உங்களை விரைவில் பார்க்கிறேன்” என ஸ்ருதி ஹாசன் தெரிவித்து உள்ளார்.
அவர் விரைவில் குணமைடைய வாழ்த்துவதாக பல பிரபலங்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.