விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.
இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தை தயாரித்து வருகிறார், அப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடரான இடங்களில் வருமான துறை சோதனை நடத்தியுள்ளது.
எல்ரெட் குமார் மற்றும் கூட்டாளிகள் ரூ.1000 கோடிக்கு மேலாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கருப்பு பணத்தை ரியல் ஸ்டேட் மற்றும் சினிமா தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் முதலீடு செய்துள்ளதை எல்ரெட் குமார் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரோகம், மற்றும் 8.4 கிலோ தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.