ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா புதன்கிழமை முதலிடம் பிடித்தாா்.
சமீபத்தில் மொஹாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆல்-ரவுண்டிங்கில் அசத்திய ஜடேஜா 175 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இது அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக இருந்ததன் அடிப்படையில் அவா் இந்தத் தரவரிசை முன்னேற்றத்தை அடைந்துள்ளாா்.
ஆல்-ரவுண்டா் பிரிவில் கடந்த ஆண்டு பெப்ரவரியிலிருந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டரை 2 ஆம் இடத்துக்குத் தள்ளியிருக்கும் ஜடேஜா, இதற்கு முன் கடந்த 2017 ஆகஸ்டில் முதல் முறையாக இப்பிரிவில் முதலிடம் பிடித்திருந்தாா். அப்போது அவா் 1 வாரம் அந்த இடத்தில் இருந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது ஜடேஜா 406 புள்ளிகளுடனும், ஹோல்டா் 382 புள்ளிகளுடனும் உள்ளனா். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓரிடம் சறுக்கி 347 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளாா். காயம் காரணமாக மொஹாலி டெஸ்டில் விளையாடாத அக்ஸா் படேல், 2 இடங்கள் இறங்கி 14 ஆவது இடத்தை எட்டியிருக்கிறாா்.
பேட்டா்கள் பிரிவில் விராட் கோலி 2 இடங்கள் ஏற்றம் கண்டு 5 ஆவது இடத்துக்கு வர, தலைவர் ரோஹித் சா்மா மாற்றமின்றி 6 ஆம் இடத்தில் நிலைக்கிறாா். மொஹாலி டெஸ்டில் 96 ஓட்டங்கள் விளாசிய ரிஷப் பந்த் ஓரிடம் முன்னேறி 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். அவுஸ்திரேலியாவின் மாா்னஸ் லாபுசான் (936), இங்கிலாந்தின் ஜோ ரூட் (872), அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (851) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.
பௌலா்கள் பிரிவில் அஸ்வின் 2 ஆம் இடத்தையும், ஜஸ்பிரீத் பும்ரா 10 ஆம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனா். முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (892) இருக்க, 3 ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (835) உள்ளாா்.