விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு மாஸாக வெளியாகி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்திற்கான ரிலீஸ் திகதி பல முறை மாறி இன்று வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
RRR திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு வெளியாக ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் படத்தை கொண்டாடி வருகிறார்கள். தற்போது படம் முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலியாவில் $441K வசூலித்துள்ளது.
மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 253K தான் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் மாஸ்டர் பட வசூலை RRR திரைப்படம் முறியடித்துள்ளது.