சிறு வயதில் வீட்டுத்திண்ணையில் படுத்து எண்ணிக்கொண்டு இருந்த நட்சத்திரங்கள் காணாமல் போனதாக உணர்கின்றீர்களா?
நாம் அமைத்த பளீர் விளக்குகள்தான் இதற்கு காரணம். நமது நகரங்களின் பளீர் விளக்குகளால் நிகழும் இந்த ஒளி மாசுபாடுதான் நட்சத்திரங்கள் நமது கண்களில் தென்படாமல் போவதற்கு காரணம்.
உலகப் பிரபலமான நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிங்கப்பூர் மற்றும் தோஹா நகரங்களில் மாபெரும் விண்ணை முட்டும் கட்டிடங்களுடன், நட்சத்திர கூட்டம் அடங்கிய பளிச் வானத்தையும் காண முடிந்தால் எப்படி இருக்கும்? என்ற பதினாறு வயது புகைப்படக்கலைஞர் டேவிட் ஆலிவர் லெனான் என்ற சிறுவனின் சிந்தனையானது, வீடியோ வடிவத்தில் சமீபத்தில் வெளியானது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் நட்சத்திரங்கள் ஜொளிக்கும் வானத்தை உலகப் புகழ்பெற்ற கட்டிடங்கள் உள்ள வானத்தில் சேர்த்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் டேவிட் ஆலிவர் லெனான்.
மனம் மயக்கும் இந்த வீடியோவைக் கண்டுகளிக்கவும்.