அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செல்ல நாய்களில் ஒன்றை கடத்துவதற்கு திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒபாமா குடும்பத்தின் செல்ல நாய்களான போ அல்லது சன்னி-யை கடத்திவருவதற்காக ஸ்கொட் ஸ்டோக்கெர்ட் என்ற அந்த நபர் தலைநகருக்கு பயணிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் கொடுத்துள்ளனர்.
வாஷிங்டனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது வாகனத்திலிருந்து ஷாட்கன் துப்பாக்கி, ரைஃபிள் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உள்ளூர் துப்பாக்கிச் சட்டவிதிகளை மீறியுள்ளதாக ஸ்டாக்கெர்ட் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.