தமிழ் சினிமாவில் தற்போதைக்கு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படங்களுக்கு தமிழகம் தாண்டி, ஆந்திரா, கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் விஜய் நடித்த ஜில்லா படத்தில் மோகன் லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது அஜித்தும் மோகன் லாலுடன் இணைந்து நடிக்கவிருக்கின்றாராம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் ஒரு மலையாள நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது, இதனால், அவர்கள் மோகன் லாலை அனுகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மோகன் லால் சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.