எதிர்பார்த்தப்படியே சீன நிறுவனமான கூல்பேட் தனது நோட் 3 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போனை பிரத்தியேகமாக அமேசான் இந்தியாவில் வாங்குவதற்குக்கான முன்பதிவு நேற்று (ஜனவரி 15) முதல் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனவரி 28-ஆம் தேதி, மதியம் 2 மணி முதல் கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் ப்ளாஷ் சேல் நடைப்பெறும் என்றும் கூல்பேட் நிறுவன அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூல்பேட் நோட் 3 லைட்-ன் விலை, சிறப்பம்சங்கள் போன்றவைகளை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
விலை & நிறம் :
அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என்பது குறிப்பிடத்தக்கது. ஹாண்ட் செட் ஆனது, ஷாம்பெயின் வெள்ளை (champagne white) மற்றும் கருப்பு மாறுபாடு (black variant) ஆகிய இரண்டு வகையான நிறங்களில் கிடைக்கின்றது.
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் :
இதன் முந்தைய மாடலைப் போலவே இதிலும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3ஜிபி ரேம், 4ஜி எல்டிஇ இணைப்பு வசதி ஆகியவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்ப்ளே & மெமரி
5இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட 16 ஜிபி இன்டர்நெல் மெமரி மற்றும் 64 ஜிபி வரை எஸ்டி கார்ட் மூலம் நீட்டித்துக் கொள்ளும்படியான வசதியும் உள்ளது.
கேமிரா,ஓஎஸ்,இணைப்பு,பேட்டரி:
பின்பக்க கேமிரா : 13 எம்பி (ஆட்டோ ப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் உடன்) முன்பக்க கேமிரா : 5 எம்பி சாப்ட்வேர் : ஆண்ராய்டு 5.1 லாலிப்பாப் 4ஜி இணைப்பு வசதி, ப்ளூ டூத் 4.0, வைபை ஆகிய வசதிகளும் உள்ளடக்கம். 2500 எம்ஏஎச்பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இது சுமார் 8 மணி நேரம் வரை நீடிக்கும் (டால்க் டைம்).
ஸ்மார்ட் பேண்ட் :
கூல்பேட் நோட் 3 லைட் உடன் கூல்பேட் ஸ்மார்ட் பேண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இதுவும் விரைவில் இந்திய சந்தைகளுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.