இந்தி சினிமா உலகின் வெற்றிப்பட கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தீபிகா படுகோனே.
சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, ஹேப்பி நியூ இயர், பிக்கு, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி என தொடர்ந்து வெற்றிப்படங்களால் மற்ற பாலிவுட் நடிகைகளின் மார்க்கெட்டையும் ஆட்டம் காண செய்துள்ள தீபிகா படுகோனே, தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் வின்டீசலின் அடுத்த படமான ”டிரிபிள் எக்ஸ்: தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜெட்லியும், டோனி ஜாவும் இணைவார்கள் என தெரிகிறது.
இந்த படத்திற்காக தீபிகா படுகோனே ஜிம்மில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பயிற்சியாளர் யாஷ்மின் கரசிவ்லா பயிற்சி அளித்து வருகிறார். யாஷ்மின் கரசிவ்லா ஏற்கனவே தீஷ் மார் கான் படத்திற்காக கத்ரீனா கைப்புக்கும், ராம் லீலாவுக்காக தீபிகா படுகோனேவுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.
இதற்காக, ஜிம்மிலேயே பழியாய்க் கிடக்கும் தீபிகா படுகோனே தீவிரப்பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.