சுதா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் இறுதிச்சுற்று. இப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
இதில் இறுதிச்சுற்று இரண்டாம் பாகம் வருமா? என கேட்க, ஒரு பாகம் எடுப்பதற்கே தலைச்சுற்றி விட்டது, இரண்டாம் பாகம் தான் யோசிக்க கூட முடியவில்லை என கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இப்படத்தில் மாதவனை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை, அவர் இல்லை என்றால் இப்படத்திற்கு அக்ஷய் குமாரை தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என பதில் அளித்துள்ளார்.