மிருதன் படத்தின் ரிலிஸை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றார் லட்சுமி மேனன். இவர் நடிப்பில் கடந்த வருடம் வேதாளம் படம் திரைக்கு வந்தது.
இப்படத்திற்காக இவர் நீண்ட நாட்கள் கால்ஷிட் கொடுத்திருந்தார். இந்நிலையில் சென்ற வருடம் தான் இவர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தார்.
ஆனால், இவர் கல்லூரிக்கு ஒரு நாளும் வராமல், படப்பிடிப்பிற்கு தான் சென்றுள்ளார். இதனால், இவரை நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கிவிட்டதாம், தற்போது ஓபன் யுனிவர்சிட்டியில் தான் படித்து வருகிறாராம்.